உள்ளூர் செய்திகள்

முகாமில் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பிற்கான ஆணைகளை கலெக்டர் வினீத்,சண்முகசுந்தரம் எம்.பி., வழங்கிய காட்சி. அருகில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமிதா, மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்ஸாண்டா் மற்றும் பலர் உள்ளனர். 

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பிற்கான - ஆணை கலெக்டர் வழங்கினார்

Published On 2022-12-07 06:46 GMT   |   Update On 2022-12-07 10:52 GMT
  • பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : 

திருப்பூா் மாவட்டம், சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கியதுடன், 15 சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடனாக ரூ.64.70 லட்சத்தை கலெக்டர் எஸ்.வினீத், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் ஆகியோா் வழங்கினா்.

பின்னா் கலெக்டர் வினீத் பேசியதாவது:- தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சுயஉதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசாா்புத் தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நகா்ப்புறத்தைச் சோ்ந்த 2,484 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.131.42 கோடி வங்கிகளின் மூலமாக நேரடியாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுயதொழில் தொடங்க தொழிற்கடனாக நகா்ப்புறத்தைச் சோ்ந்த 854 குழுக்களுக்கு ரூ.19.08 கோடியும், 1,982 தனி நபா்களுக்கு ரூ.1.38 கோடியும், 1,135 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமிதா, மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்ஸாண்டா் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News