உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அஞ்சல் வார விழா நாளை தொடக்கம்

Published On 2023-10-08 17:14 IST   |   Update On 2023-10-08 17:14:00 IST
  • மாநில அரசின் சார்பில் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
  • ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், வசதிகளும் உள்ளன.

திருப்பூர்,அக். 8-

வருகிற 9-ந் தேதி உலக அஞ்சல் தினம், 10ந் தேதி, அஞ்சல் சமூக வளர்ச்சி தினம், 11-ந் தேதி அஞ்சல் தலை சேமிப்பு தினம், 12-ந் தேதி, தபால்கள் மற்றும் பார்சல்களுக்கான தினம், 13-ந் தேதி, சாமானியர் நல்வாழ்வு தினம் ஆகியவை கொண்டாடப்படுகிறது.இவை, திருப்பூர் அஞ்சல் கோட்ட அளவிலும், சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது, மாநில அரசின் சார்பில் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.இவை அஞ்சலக வங்கிக்கணக்கு வாயிலாகவும் வழங்கப்படுவதால், அஞ்சலகங்களில் புதிய கணக்கு துவக்கி பயன் பெறலாம்.இதுதவிர, 7.5 சதவீத வட்டி சலுகையில், பிரத்யேக மகளிர் கணக்கு, 2025 மே 31 வரை துவக்கப்படும். 10 வயது பெண் குழந்தைகளுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கும் வகையிலும், ஆண் குழந்தைகளுக்கு, 7.1 சதவீதம் வட்டி வழங்கும் வகையிலும் சேமிப்பு கணக்கு துவக்கலாம்.

ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், வசதிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News