கோப்புபடம்
- உணவுப் பொருட்கள் தரமானதாகவும் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
- குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை இணைந்து உணவுப்பொருள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது. உடுமலை வியாபாரிகள் சங்கத்தில் நடைப்பெற்ற முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான எம்.மணிகண்டன் தலைமை தாங்கி பேசும்போது "உணவுப் பொருட்கள் தரமானதாகவும் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தண்டனை என்ன என்பதையும் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது என்றார்.
இதில் உடுமலை ஜே.எம்.எண்.2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி,உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலநாகமாணிக்கம், துணை தலைவர் செல்வராஜ், பொருளாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, இணைச் செயலாளர் சிவஜோதி ஆயில் சுடலைமணி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.