உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலையில் பராமரிப்பின்றி வீணாகும் சலவைத்துறை

Published On 2022-07-01 08:30 GMT   |   Update On 2022-07-01 08:30 GMT
  • வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
  • சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது.

உடுமலை :

உடுமலை நகராட்சி சார்பில், சலவைத்தொழிலாளர்கள் வசதிக்காக கோமதி நகரில் 2003ம் ஆண்டில் சலவைத்துறை கட்டப்பட்டது.இங்கு வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும், சலவைத்தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை, கழிப்பிடம், குடிநீர், துணிகளை உலர வைத்தல் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், இங்கு வந்து துணிகளை துவைத்து, உலர வைத்து எடுத்துச்சென்றனர்.

தொடர்ந்து சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது. கட்டடங்களும் உடைந்து வீணாகி வருகிறது. 20 ஆண்டு பழமையான சலவைத்துறை பயனற்று உள்ளதால் அத்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை பகுதியிலுள்ள, சலவைத்தொழிலாளர்கள் எடுக்கும் துணிகளை பல கி.மீ., தூரம் உள்ள, பி.ஏ.பி., கால்வாய், அமராவதி கால்வாய்களில் தண்ணீர் வரும் போதும்,அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று, துவைத்து எடுத்து வரும் அவல நிலை உள்ளது.எனவே சலவைத்துறையை புதுப்பிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News