உள்ளூர் செய்திகள்
பொது மக்களுக்கு இணிப்புகள் வழங்கிய காட்சி.
- ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இணிப்புகள் வழங்கினர்.
இதில் மாவட்ட அவைதலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட எம் .ஜி .ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.