உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தென்னை மரங்களுக்கு உள்சாய்வு வட்டவடிவ பாத்தி அமைக்கலாம் - வேளாண் பல்கலைக்கழகம் அறிக்கை

Published On 2023-04-09 10:49 GMT   |   Update On 2023-04-09 10:49 GMT
  • மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது.
  • கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும்.

குடிமங்கலம் :

வறண்ட வானிலை நிலவு வதால் தென்னை மரங்களு க்கு உள்சாய்வு வட்டவடிவ பாத்தி அமைக்கலாம் என வேளாண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகி றது.அதில் திருப்பூர் மாவட்டத்துக்கான சாகுபடி பரிந்துரையில், வறண்ட வானிலை நிலவுவதால் தென்னை மரத்தை சுற்றி உள்சாய்வு வட்ட பாத்திகளை அமைப்பது, கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும். சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து கோடை மழையினை சேமிக்க லாம்.காய்கறி பயிர்களில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்க வேண்டும்.வாழை சாகுபடியில் 5 மாதத்துக்கு மேல் வளர்ச்சி தருணத்திலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்தும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்பு ள்ளது. தீவனப்பயிர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பாசன வசதியுள்ள விவசாயிகள் 10 சதவீத நிலத்தில் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.ஆட்டுக்கொள்ளை நோய் தாக்குதல் ஏற்படுவதை தவிர்க்க கால்நடை மருத்துவ மனையில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். நிலவும் வானிலையால் மா பூங்கொத்துகளில் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.ஒரு மில்லி தயோமீத்தக்ஸிம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு ள்ளது.

Tags:    

Similar News