உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வடுகபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

Published On 2022-08-22 06:46 GMT   |   Update On 2022-08-22 06:46 GMT
  • வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
  • சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அவிநாசி :

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவராக உள்ளவர் சரவணக்குமார். வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் வந்த ஒரு பதிவை பரப்பியதாக, அக்கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதை காரணம் காட்டி வடுகபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவியில் இருந்து சரவணக்குமார் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீனில் வந்த சரவணக்குமார், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்ததில், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சரவணகுமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'என் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால், பொறுப்பு தலைவரை உடனடியாக விலக உத்தரவிட்டு என்னை மீண்டும் தலைவராக பணியாற்றிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News