கோப்புபடம்.
காங்கயத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
- குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது.
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இப்பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம கோவில்களில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, மகளிா் திட்ட நிா்வாகிகள், காங்கயம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.