உள்ளூர் செய்திகள்

கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை படத்தில் காணலாம்.

கருகம்பாளையம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-07-13 13:02 IST   |   Update On 2022-07-13 13:02:00 IST
  • புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியும்,உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
  • தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை பள்ளிமேலாண்மைக்குழு பணிகளைப் பற்றி விளக்கிப்பேசினார்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மைகுழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியும்,உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார். கருகம்பாளையம் அரசுஉயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் காஞ்சனமாலை பள்ளிமேலாண்மைக்குழு பணிகளைப் பற்றி விளக்கிப்பேசினார்.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் துரைசாமி வரவேற்புரையாற்றினார்.ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பெரியசாமி,துளசிமணி,மற்றும் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News