உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள். 

திருப்பூர் பேக்கரிகளில் முறைகேடாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்பாடு - அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Published On 2022-11-11 11:40 GMT   |   Update On 2022-11-11 11:40 GMT
  • 14 கிலோ எடை கொண்ட் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகரப்பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களில் வீட்டு உபயோகத்திற்கு பயண்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பூர் பி.என் ரோடு, போயம்பாளையம், மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியகளில் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது போயம்பாளையத்தில் செயல்பட்டுவந்த ஒரு பேக்கரியில் முறைகேடாக வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தகடையிலிருந்த 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News