உள்ளூர் செய்திகள்
கொடியேற்று விழாவில் பங்கேற்றவர்கள்.
பல்லடத்தில் இந்து சாம்ராஜ்ய விழா
- பல்லடம் ஒன்றிய பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
இந்து முன்னணி சார்பில் வீரசிவாஜி மன்னராக முடி சூட்டிய நாளை இந்து சாம்ராஜ்ய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இதன்படி வீரசிவாஜி மன்னராக முடி சூட்டிய நாளை முன்னிட்டு பல்லடம் ஒன்றிய பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டச் செயலாளர் சர்வேஸ்வரன் கொடியேற்றி வைத்தார்.
இதே போல பல்லடம் நகரப் பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.