உள்ளூர் செய்திகள்

முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

இலவச சட்ட உதவி விழிப்புணர்வு வாகனம் முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

Published On 2022-11-08 08:31 GMT   |   Update On 2022-11-08 08:31 GMT
  • ‘எல்லோருக்குமான இலவச சட்ட உதவி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
  • 3 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காணொலி மூலமாக ஒளிபரப்பப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'எல்லோருக்குமான இலவச சட்ட உதவி' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி, வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, 'இன்று (நேற்று) முதல் இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை காணொலி மூலமாக ஒளிபரப்பப்படும். எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் சுகந்தி, நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, ஸ்ரீகுமார், சார்பு நீதிபதிகள் செல்லத்துரை, மேகலா மைதிலி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதிபிரபா, பழனிக்குமார், முருகேசன், ரஞ்சித்குமார், ஆதியன், கார்த்திகேயன், வக்கீல்கள் அருணாசலம், ஈஸ்வரமூர்த்தி, சிவபிரகாசம், சண்முகவடிவேல், பத்மநாபன், ராஜேந்திரன், ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News