உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தர்ப்பூசணி விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

Published On 2023-04-18 11:54 GMT   |   Update On 2023-04-18 11:54 GMT
  • கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
  • ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர்.

மடத்துக்குளம் :

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக மேட்டுப்பா த்தியில் நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து விதைகளை நடவு செய்கின்றனர்.

செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகி ன்றனர். எனவே ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர். இதனால் கோடை காலத்தில் பிற மாவட்ட வரத்தை எதிர்பார்க்கும் நிலை குறைந்தது.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல் தர்பூசணி விளைநில ங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இந்த பாதிப்பால் சில பகுதிகளில் தர்பூசணி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில்சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை துவங்கியுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தர்பூசணியை கிலோ 12 - 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.அதிக வெயில்உள்ளிட்ட காரணங்களால் ஏக்கருக்கு 2 டன் வரை விளைச்சல் குறைந்துள்ளது.சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில்விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தைதவிர்க்க முடியும் என்றனர்.

Tags:    

Similar News