உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வசதி - மாநகராட்சி ஆணையர் தகவல்

Published On 2022-08-13 08:00 GMT   |   Update On 2022-08-13 08:00 GMT
  • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
  • வாக்காளர்கள் இணையதளத்தில் மற்றும் செயலி மூலமாக தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம்.

திருப்பூர் :

இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களின் விருப்பத்தின்படி ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரெ தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் தவிர்க்க முடியும். வாக்காளர்கள் இணையதளத்தில் NVSP மற்றும் voter portal மூலமாகவும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம்.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6B என்ற விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு முகாமில் படிவம் 6B யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவுசீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை இணைக்கலாம். இந்த தகவலை தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News