உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நீதிபதி பேச்சு

Published On 2022-11-28 11:18 IST   |   Update On 2022-11-28 11:18:00 IST
  • அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.
  • நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி இணைந்து தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு மற்றும் 'போக்சோ' சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவ கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் பங்கேற்று தலைமை வகித்தார். அரசு மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் வரவேற்றார்.

இதில் மாவட்ட நீதிபதி பேசியதாவது:- தேசிய அரசியலமைப்பு சட்ட நாளன்று மாணவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வளவு உரிமைகள் உள்ளதோ, அதற்கேற்ற கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.

அவற்றில் நான்காவது கடமை என்னவென்றால், தேசத்துக்கு போர், நோய், பஞ்சம் போன்ற அச்சுறுத்தல்கள் வரும் போது மக்கள் ஆகிய நாம், துறை ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா நோய் தொற்று காலத்தில், நாங்ளெல்லாம் நலமுடன் இருக்க, 24 மணி நேரமும் ஓய்வின்றி பணி செய்து தங்கள் கடமைகளை சிறப்பாக செய்த மருத்துவ துறையினருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நீதிமன்றங்களுக்கு வரும் பல குற்ற வழக்குகளில், மருத்துவ துறையின் பங்களிப்பு இன்றியமையாதது. நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் 'போக்சோ' சட்டம் குறித்தும், சட்ட உதவி மையம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

Tags:    

Similar News