உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - நின்று கொண்டே பயணிக்கும் அவலம்

Published On 2023-05-02 16:20 IST   |   Update On 2023-05-02 16:20:00 IST
  • பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
  • இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.

உடுமலை:

விடுமுறை நாட்கள் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

பாலக்காடு - திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7:10 மணிக்கு வந்து 7:15 மணிக்கு கிளம்புகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது. ெரயிலில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். ெரயில் பெட்டியில் இடமில்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.

இது குறித்து ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். 110 பேர் வரை உட்கார்ந்து செல்ல வசதியுள்ளது. மற்றவர்கள் நின்று தான் செல்ல வேண்டும்.

உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி ெரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை ெரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் டுவிட்டர் வாயிலாக ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.

Tags:    

Similar News