உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

Published On 2022-08-29 05:09 GMT   |   Update On 2022-08-29 05:09 GMT
  • கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
  • நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கயம் :

காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News