உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்த காட்சி. 

காங்கயத்தில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா

Published On 2022-11-07 11:32 GMT   |   Update On 2022-11-07 11:32 GMT
  • அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்.
  • அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

காங்கயம் :

காங்கயம் திருப்பூர் சாலையில் தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் வரவேற்றார்.காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் மோகனசெல்வம், ஒன்றிய செயலாளர்களான வெள்ளகோவில் சந்திரசேகரன், சென்னிமலை கிழக்கு பிரபு, மூலனூர் பழனிசாமி, குண்டடம் கிழக்கு சிவசெந்தில்குமார், மேற்கு சந்திரசேகர், நகர செயலாளர்களான காங்கயம் வசந்தம் சேமலையப்பன், வெள்ளகோவில் சபரி முருகானந்தம், மூலனூர் தண்டபாணி, கன்னிவாடி சுரேஷ் மற்றும் யூனியன் கவுன்சிலர்களான சந்தானலட்சுமி, அருண் தீபக், பழனாத்தாள் மாரிமுத்து, சிவன்மலை ஊராட்சி துணை தலைவர் சண்முகம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலர் சிவகுமார், வீரணம்பாளையம் ஊராட்சி தலைவர் உமாநாயகி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவனாந்தன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News