உள்ளூர் செய்திகள்

அவிநாசியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - ஆ.ராசா எம்.பி., தொடங்கி வைத்தார்

Published On 2022-12-13 03:59 GMT   |   Update On 2022-12-13 03:59 GMT
  • ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
  • அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவிநாசி : 

அவிநாசி, சேவூா், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் , வடுகபாளையம், சின்னேரிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் குடிநீா்த் தொட்டி, சூளை பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவுநீா் வடிகால், ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

இதைத்தொடா்ந்து திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுர விளக்கு, பெரியாயிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தாா்.இதையடுத்து ஆ.ராசா முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயகுமாா் (தத்தனூா்), சுப்பிரமணியம் (வடுகபாளையம்) உள்ளிட்ட 50 போ் தி.மு.க.வில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தாா். திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் குமாா், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News