உள்ளூர் செய்திகள்

உடுமலையில் ரயில்வே கேட் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

உடுமலை ரயில்வே கேட் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2023-03-10 11:20 GMT   |   Update On 2023-03-10 11:20 GMT
  • உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது.
  • இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராமசாமி நகர் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் சுமார் இரண்டு மணி நேரம் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன.

Tags:    

Similar News