கோப்புபடம்
பல்லடத்தில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல்
பல்லடம்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து ஆய்வாளர்கள் நிர்மலா தேவி (பல்லடம்), ஈஸ்வரன் (காங்கேயம்) உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 35 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விதிகளை மீறி ஏர் ஹாரன்கள் பொருத்தி இருந்ததற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது .மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.