உள்ளூர் செய்திகள்
குளோரினேசன் செய்வதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டக் காட்சி.
குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு குளோரினேசன் செய்முறை பயிற்சி
- குளோரினேசன் செய்வதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
- டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார சுகாதார துறையின் சார்பில் பொங்கலூர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல் நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு முறையாக குளோரினேசன் செய்வதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.