உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் புத்தக திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-01-25 13:07 IST   |   Update On 2023-01-25 13:07:00 IST
  • தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
  • அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 19 வது திருப்பூர் புத்தக திருவிழா -2023 காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் வளாகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் பிப்ரவரி 5ந்தேதி வரை நடக்கிறது. இதனை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் திறந்து வைக்கின்றனர். பொது நூலக இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் வினீத், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், கமிஷனர் கிராந்திகுமார், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

தினமும் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும் கலை நிகழ்ச்சியில் 28ந் தேதி இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

29-ந்தேதி சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற தலைப்பில், எம்.பி., வெங்கடேசன், சுபஸ்ரீ தணிகாசலம் தமிழ் வளர்த்த திரை இசை நிகழ்ச்சி, 30ந் தேதி புத்தகம் எனும் போதிமரம் தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசுகின்றனர்.பிப்ரவரி 1-ந் தேதி எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், 2ந் தேதி அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.

3-ந் தேதி மரபு வழிப்பாதை தலைப்பில் டாக்டர் சிவராமன், 4ந்தேதி கீழடி சொல்வதென்ன? என்ற தலைப்பில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.

Tags:    

Similar News