உள்ளூர் செய்திகள்

போலீசார் வைத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு பலகையை படத்தில் காணலாம்.

கீழ்பவானி பாசன கால்வாயில் குளிக்க தடை

Published On 2023-08-31 07:42 GMT   |   Update On 2023-08-31 07:42 GMT
  • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
  • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

காங்கயம்:

முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News