உள்ளூர் செய்திகள்

 கூட்டத்தில் கவுன்சிலர் கண்ணப்பன் பேசிய போது எடுத்த படம்.

44-வது வார்டில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் - கவுன்சிலர் கண்ணப்பன் பேச்சு

Published On 2022-09-22 07:25 GMT   |   Update On 2022-09-22 07:25 GMT
  • 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
  • 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வாசுகுமார் முன்னிலை வகித்தார். 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 44- வது வார்டு மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் பேசியதாவது :- 44-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே 44-வது வார்டில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.அதேபோல் துப்புரவு பணிகள், சாலை பணிகள் , தெருவிளக்கு பழுது நீக்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். மேலும் காய்ச்சல் பரவல் அதிக அளவில் உள்ளது.

சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். வார்டு பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை வரவில்லை என பேசினார். இதேபோல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி பேசினர்.

Tags:    

Similar News