உள்ளூர் செய்திகள்

ஏ.வி.பி. பள்ளியில் அரசியல் அமைப்பு தினம் கொண்டாட்டம்

Published On 2022-11-28 12:43 IST   |   Update On 2022-11-28 12:43:00 IST
  • இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.

திருப்பூர் : 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பற்றிய சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார்.

மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அரசியலமைப்பு சட்டம் குறித்து உரையாற்றினர். மேலும் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது. அரசியல் அமைப்பு சபையில் பங்கேற்ற தலைவர்கள் போல வேடமணிந்த மாணவர்கள் அந்தந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். பள்ளி தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News