உள்ளூர் செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கோப்புகளை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஆய்வு

Published On 2023-09-23 09:44 GMT   |   Update On 2023-09-23 09:44 GMT
  • தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
  • அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

பல்லடம்:

பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ( பொ ) புவனேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள்,பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

மேலும் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை தமிழில் கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தத்தப்பட்டு உள்ளது.

மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News