உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கார் டிரைவர் மீது தாக்குதல்

Published On 2023-09-09 16:07 IST   |   Update On 2023-09-09 16:07:00 IST
  • காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார்.
  • வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர்.

அவினாசி:

அவினாசியை அடுத்து வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். தனது காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனிடம் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது .

காரை நிறுத்தக்கூடாது என கூறியதாக தெரிகிறது .அதற்கு மணிகண்டன், பயணிகள் மொபைல் போன் மூலம் புக் செய்து தான் செல்கிறார்கள். எல்லோரையும் ஏற்றி செல்வதில்லை. எதற்காக இங்கு நிறுத்த வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதனை கண்டித்தும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவினாசி தாசில்தாரிடம் டாக்சி டிரைவர்கள் மனு கொடுத்தனர். 

Tags:    

Similar News