உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது
- அரிய தொண்டு செய்பவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023-24-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண்.113-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம். இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.