உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு பணி

Published On 2022-11-04 07:09 GMT   |   Update On 2022-11-04 07:09 GMT
  • பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
  • செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

திருப்பூர் :

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப்பிரிவு பொன்னையராஜபுரம், உப்பிலிபாளையம் 272 அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு பகுதி நிலை 2 மற்றும் நிலை 3, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டங்களும் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்ற சுயநிதி திட்டங்களான கணபதி சுயநிதி திட்டங்கள் பகுதி I, II, III மற்றும் சிங்காநல்லூர் சுயநிதி திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், மற்றும் மனைகளுக்கு 5.10.2022 மற்றும் 21.10.2022 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இக்குலுக்கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News