உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வினீத் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள். 

எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-12-02 06:05 GMT   |   Update On 2022-12-02 06:05 GMT
  • விதவை/கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
  • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்கள் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் கலெக்டர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும் 2 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு விதவை/கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் பல்லவி வர்மா ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், மாவட்ட திட்ட மேலாளர்கள் (பொறுப்பு) ஹரிஹரகுகன், (பொறுப்பு) சிவக்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பணியாளர்கள், இலக்கு மக்களுக்கான தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News