உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மாமூல் கொடுக்காததால் கடையை தீ வைத்து எரித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Update: 2022-08-19 11:20 GMT
  • கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
  • கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் திருமுருகன்பூண்டி சன்னதிவீதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 35).இவர் அப்பகுதியில் புதியபொருள் பழைய பொருட்கள்வாங்கிவிற்பனை செய்யும் கடைநடத்தி வருகிறார்.

கடந்த ஜூன் 26 ந்தேதி இவரது கடைக்கு மாமூல் கேட்டு ஒருவர்சென்றார். பணத்தைகொடுக்க மறுத்ததால்,திருப்பத்தூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (29) என்பவர், கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இது குறித்த புகாரின் பேரில் சுபாஷ் சந்திரபோசை திருமுருகன்பூண்டி போலீசார்கைது செய்து சிறையில்அடைத்தனர்.

இவர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் இரண்டு வழிப்பறி, வேலம்பாளையத்தில் கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது. இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்நடந்துவருவதால், சுபாஷ் சந்திரபோசை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்துசிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர்பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சுபாஷ் சந்திர போசை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாநகரில் கடந்த 8 மாதங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News