உள்ளூர் செய்திகள்

காயமடைந்த மாணவர்.

ரெயிலில் இருந்து கீழே விழுந்த திருப்பூர் மருத்துவ கல்லூரி மாணவரின் கால் துண்டானது

Published On 2023-03-17 16:33 IST   |   Update On 2023-03-17 16:33:00 IST
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
  • சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை சேர்ந்தவர் பால செல்வகுமார் (வயது 25). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் சிதம்பரத்தி லிருந்து மயிலாடுதுறை செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு, நடைமேடையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அதில் பாலசெல்வகுமார் ஏறினார்.ரெயில் விழுப்புரம் மார்க்கம் செல்வதாக தெரிந்த பிறகு வண்டியில் இருந்து கீழே இறங்கிய போது தவறி கீழே விழுந்தார்.

இதில் அவரது கால் துண்டானதுடன் தலையிலும் அடிபட்டது.படுகாயம் அடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் பால செல்வகுமாரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். துண்டான காலும் பதப்படுத்தப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.

Tags:    

Similar News