உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிறுபான்மையினா் கடன் பெற சிறப்பு முகாம் 18-ந்தேதி முதல் நடக்கிறது

Published On 2022-07-15 08:19 GMT   |   Update On 2022-07-15 08:19 GMT
  • 2022-23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கடன் பெற வரும் வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 22ந்தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2022- 23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாமானது திருப்பூா் வடக்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையும், திருப்பூா் தெற்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், அவிநாசி வட்டத்தில், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந் தேதி காலையிலும், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந்தேதி பிற்பகலிலும் முகாம் நடைபெறுகிறது.

பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளை, தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஜூலை 20ந்தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது. உடுமலை வட்டத்தில், உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 22 ந் தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News