உள்ளூர் செய்திகள்

நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மோதிய தனியார்  பஸ்.

பல்லடத்தில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது மோதிய தனியார் பஸ்

Published On 2023-07-05 06:34 GMT   |   Update On 2023-07-05 11:15 GMT
  • 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
  • அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து நின்றிருந்த வாகனங்களில் மீது மோதியது.

பல்லடம்,ஜூலை.5-

கோவையில் இருந்து திருப்பூர் வரை செல்லும் ராஜலட்சுமி என்ற தனியார் பஸ் நேற்று வழக்கம் போல கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர் செல்வதற்காக பல்லடம் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருப்பூரைச் சேர்ந்த உதயகுமார்(32) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக ரமேஷ் என்பவர்இருந்தார்.

இந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள்,1அமரர் ஊர்தி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. புறச்சாலையில் செல்லும் அதே வேகத்தில் பல தனியார் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் செல்கின்றன.

இதற்கிடையே ஆம்புலன்ஸில் டிரைவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பஸ்ஸில் முன்புறம் அமர்ந்திருந்த பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த விபத்தால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News