திருப்பூர் அருகே பாறைக்குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
- மீன்பிடிக்க சென்று எதிா்பாராதவிதமாக பாறைக்குழிக்குள் தவறி விழுந்துள்ளாா்.
- பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் கே.வி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் எம்.முத்துராஜ் (வயது 31). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சுண்டமேடு பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக பாறைக்குழிக்குள் தவறி விழுந்துள்ளாா்.
இதையடுத்து முத்துராஜ் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் தேடி வந்தனா். இந்நிலையில், பாறைக்குழியில் ஆண் உடல் கிடப்பதாக பொதுமக்கள் பாா்த்து திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் பாறைக்குழியில் இறங்கி முத்துராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.