உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் பகுதியில் 6 ஆண்டுகளில் சாலை விபத்தில் 981 பேர் உயிரிழப்பு

Published On 2023-02-17 06:38 GMT   |   Update On 2023-02-17 06:38 GMT
  • சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

காங்கயம் :

சாலை விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக பதிவேட்டின்படி காங்கயம் தாலுகா பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 981 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 155 பேரும், 2018-ம் ஆண்டில் 174 பேரும், 2019-ம் ஆண்டில் 182 பேரும், 2020-ம் ஆண்டில் 163 பேரும், 2021-ம் ஆண்டில் 147 பேரும், 2022-ம் ஆண்டில் 160 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலேயே கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் காங்கயம் தாலுகா பகுதியில் 981 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.காங்கயம் பகுதியில் விபத்துகளை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News