கோப்புபடம்
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை
- சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- தேசிய முதியோா் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 37,521 பயனாளிகளுக்கு ரூ.113.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:- தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இந்திராகாந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 37,521 பயனாளிகளுக்கு ரூ.113.20 கோடி, இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5,957 பயனாளிகளுக்கு ரூ.19.61 கோடி, இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனனுடையோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 946 பயனாளிகளுக்கு ரூ.3.57 கோடி, விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 12,945 பயனாளிகளுக்கு ரூ.32.61 கோடி, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் 10,756 பயனாளிகளுக்கு ரூ.33.60 கோடி, உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 677 பயனாளிகளுக்கு ரூ.2.31 கோடி என 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.