உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி இடமாற்றம்

Published On 2023-07-08 16:00 IST   |   Update On 2023-07-08 16:00:00 IST
  • கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது.
  • பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

கடந்த வாரம், 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது. மொத்தம் 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

பல்லடம் பி.டி.ஓ., ரமேஷ், அவிநாசி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த லீலாவதி காங்கயத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குடிமங்கலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட பியூலா எப்சிபாய் பல்லடத்துக்கும் பல்லடத்துக்கு மாற்றப்பட்டிருந்த பிரியா கலெக்டர் அலுவலக (வளர்ச்சி) மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் மகேந்திரன் குடிமங்கலம் பி.டி.ஓ.,வாகவும், காங்கயம் பி.டி.ஓ., ராகவேந்திரன் வெள்ளகோவிலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News