கோப்புபடம்
திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் 319 இருசக்கர வாகனங்கள் ஏலம்
- தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
- வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உரிமை கோரப்படாத 319 இருசக்கர வாகனங்கள் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
வாகனங்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் வாகனத்தின் ஏலத்தொகையில் இருந்து 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்த வேண்டும்.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவலை திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.