உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கானூர், பசூரில் 11-ந்தேதி மின்தடை

Published On 2023-09-09 16:30 IST   |   Update On 2023-09-09 16:30:00 IST
  • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அவினாசி:

அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கானூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர் / ஆலத்தூர், தொட்டிபாளையம், மொண்டிபாளையம், குமாரபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இதேபோல் பசூர் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பசூர், பூசாரிப்பாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர் , புதுப்பாளையம்| பூலூவபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News