உள்ளூர் செய்திகள்
குத்து விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களை படத்தில் காணலாம்.
பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை
- குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார்.
- வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்கவும், தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றைப் பெறவும், விரதம் இருந்து குத்துவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர்.
குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார். நாகராஜ குருக்கள் குத்துவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்தார். வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குத்து விளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியினர், மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.