உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்குழந்தை பிரான்சிஸ், கல்வி உதவித் தொகை வழங்கினார்.

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் பெற்றோரை இழந்த 135 மாணவர்களுக்கு ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகை

Published On 2022-12-14 09:41 GMT   |   Update On 2022-12-14 09:41 GMT
  • மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
  • இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி தன்னார்வத் தொண்டு நிறுவனம், தன்னலமற்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதில் பங்காற்றிவருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.7500-ம், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தலா.ரூ.10,000-மும் என 135 மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்குழந்தை பிரான்சிஸ், ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கும் இக்கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி, உயர்ந்த பதவியை அடைந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News