ஆலங்காயம் பகுதியில் உலக மலேரியா தினம்
- மலேரியா காய்ச்சல் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி மேல்நிம்மியம்பட்டு கிராமத்தில் உலக மலேரியா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச. பசுபதி தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம், திருப்பத்தூர் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ராமலிங்கம், மலேரியா காய்ச்சல் பரவும் விதம், கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர் பிரித்தா பழனி, நிம்மிய ம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்க டேசன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் குரு.சரவண குமார், வட்டார மருத்துவ மேற்பார்வை யாளர் இ.அப்பாஸ், கிராம நிர்வாக அலுவலர் சற்கு ணகுமார், தொடக்க ப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா, சுகாதார பணியா ளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.