உள்ளூர் செய்திகள்

7-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் முயற்சி

Published On 2023-06-02 15:36 IST   |   Update On 2023-06-02 15:36:00 IST
  • அதிகாரிகள் எச்சரிக்கை
  • மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான வாலிபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் வருவாய் துறையினர், ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் மற்றும் போலீசார் வாலிபர் வீட்டிற்கு சென்று பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினர்.

சிறுமிக்கு திருமணம் செய்தால் பெற்றோர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மீதும் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மீறி திருமணம் செய்தால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

பள்ளி மாணவியை மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை செய்ய சென்றனர்.

வீட்டில் யாரும் இல்லை இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றனர்.

Tags:    

Similar News