உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மின் கட்டணம் அதிகமாக வந்ததால் பஸ்சை சிறை பிடித்து மறியல்

Published On 2023-06-06 15:17 IST   |   Update On 2023-06-06 15:17:00 IST
  • மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியில் துணை மின் நிலையமும், அதன் அருகில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.

அதிக மின்கட்டனம்

இந்த மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சந்திரபுரம், மல்லபள்ள, வெலக்கல்நத்தம், பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதி களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மின்கட்ட ணம் வழக்கத்தை விட அதிக மாக இந்த முறை வந்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகு றித்து பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பஞ்சா யத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெலக்கல்நத்தம் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு உதவி செயற்பொறியாளர் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் திடீ ரென ஜெயபுரம் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மின்துறை அதி காரிகளிடம் பேசி உடனடி யாக நடவடிக்கை எடுக்கட் படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News