கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்த காட்சி.
கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் தலைமை தாங்கி கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் கால் நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மற்றும் சினை மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் தில்லை தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாம் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் துணை தலைவர் சாமுடி வார்டு கவுன்சிலர் தேவன் கூட்டுறவு சங்க துணை தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.