உள்ளூர் செய்திகள்

ஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு

Published On 2022-10-12 09:59 GMT   |   Update On 2022-10-12 09:59 GMT
  • வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம்
  • நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை உயரமான மலைப்பகுதியில் அமைந் துள்ளது. சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் மலைப்பாதை ஏறும் பொழுது 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 10-வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதடைந்தும், சாலையின் அடிப்பகுதியில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் பொழுது சாலையில் அதிர்வுகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் சென்றால் சாலை சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் வரும் காலம் மழைக்காலம் என்பதால் மண்ண ரித்து சாலை சரியும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, அசம்பாவிதம் நடைபெறும் முன்னே தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News