உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
- பேரணியில் மஞ்சப்பை கொண்டு செல்வோம் என வாசகம்
- மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம் கொரட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பேரணிகொரட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு விழிப்புணர்வு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தார் விழிப்புணர்வு பேரணியை கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தொடங்கி வைத்து பேசினார் விழிப்புணர்வு பேரணியில் பயன்படுத்த மாட்டோம், மஞ்சப்பை கொண்டு செல்வோம், புல்லட் வாசகங்களை கூறிச் சென்றனர்.
ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சேலம் கூட்ரோடு வரை சென்றது இறுதியில் ஊராட்சி செயலாளர் கோபி நன்றி கூறினார்.