உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் சாலை பணிகள்

Published On 2022-12-06 15:05 IST   |   Update On 2022-12-06 15:05:00 IST
  • எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
  • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு விரைவில் சாலை பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது.

இதனை நேற்று ஏலகிரிமலை ஊராட்சியில் ராயனேரி முதல் கீழ்காடு வரையும், அத்தனாவூர் முதல் கோட்டூர், பள்ளக்கணியூர், ஐயம்பாறை வரையும், பாடனூர் முதல் புத்தூர், தாயலூர் வரையும் சாலை அமைக்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணைத் தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சங்கர், மணிமேகலை, ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News